தொலைக்காட்சி விவாதங்களில் அடித்துக்கொள்ளும் மலையக பிரதிநிதிகள்! குற்றஞ்சாட்டும் அனுஷா சந்திரசேகரன்

Ranjan Ramanayake Sri lanka election 2024 General Election 2024 Sri Lanka General Election 2024
By Shadhu Shanker Oct 17, 2024 09:52 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

நாடாளுமன்றம் சென்ற எமது மலையக பிரதிநிதிகள் என்ன செய்தனர்? தொலைக்காட்சி விவாதங்களில் கூட அடித்துக்கொள்ளும் நிலைமை அல்லவா காணப்பட்டது? என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

தலவாக்கலையிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 2020 பொதுத்தேர்தலில் நான் சுயேட்சையாக களமிறங்கி இருந்தேன். அப்போது கூட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் (Basil Rajapaksa) 20 கோடி ரூபா பணம் வாங்கிவிட்டே தேர்தலில் போட்டியிட்டதாக எதிரணி தரப்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழரின் ஆதரவுடன் நிறைவேற்றப்படவுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பு : எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார்

தமிழரின் ஆதரவுடன் நிறைவேற்றப்படவுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பு : எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார்

பொதுத்தேர்தல்

அதுமட்டுமல்ல வாக்குகளை சிதறடிப்பதற்காகவே நான் களமிறக்கப்பட்டுள்ளேன் என்றெல்லாம் கூட தகவல்கள் பரப்பட்டன. ஆனால் இவை எதுவும் உண்மை அல்ல. எனது தந்தையின் நண்பர்களின் உதவியுடன்தான் பொதுத்தேர்தலை எதிர்கொண்டேன்.

தொலைக்காட்சி விவாதங்களில் அடித்துக்கொள்ளும் மலையக பிரதிநிதிகள்! குற்றஞ்சாட்டும் அனுஷா சந்திரசேகரன் | Anusha Chandrasekaran Denies Bribery Claims

தேர்தலில்  மக்கள் எனக்கு ஆதரவு வழங்கி இருந்தனர். எனினும், நாடாளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய வாக்குகளை நோக்கி நகரமுடியவில்லை. இவ்வாறு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறாததால் அரசியல் ரீதியில் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டேன். எனக்காக வேலை செய்த தொண்டர்களைக்கூட பழிவாங்கினார்கள்.

இதற்கு எதிராக குரல் எழுப்பினேன். அவ்வாறு குரல் எழுப்பும் வேளைகளில் பழிவாங்கல்கள் அதிகரித்தன. அதன்பின்னர் அமைதி காத்தேன். அடக்குமுறைகள் குறைந்தன.

எனவே, அரசியலில் அமைதியும் தேவையெனக் கருதி அமைதி காத்திருந்தேன். நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காத நான் ஐந்து வருடங்கள் எங்கே சென்றேன் எனக் கேட்கின்றனர்.

பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்துள்ள பொதுச் செயலாளர்: உறுதியான நிலைப்பாட்டில் ஹிருணிகா

பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்துள்ள பொதுச் செயலாளர்: உறுதியான நிலைப்பாட்டில் ஹிருணிகா

மலையக பிரதிநிதிகள்

 பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து களமிறங்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. எனினும், அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தொலைக்காட்சி விவாதங்களில் அடித்துக்கொள்ளும் மலையக பிரதிநிதிகள்! குற்றஞ்சாட்டும் அனுஷா சந்திரசேகரன் | Anusha Chandrasekaran Denies Bribery Claims

அதன்பின்னர் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்தேன். அவ்வேளையிலேயே தலைவர் ரஞ்சன் ராமநாயக்க என்னை அழைத்து கதைத்தார். ஊழல் அற்ற அரசியலை செய்வதற்காக புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளதாகக் கூறினார். அதில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற அந்த கட்சியின் கொள்கை பிடித்திருந்தது . அதனால் தான் அக்கட்சி ஊடாக களமிறங்கியுள்ளேன். 2020 இல் பசில் ராஜபக்சவிடம் பணம் வாங்கியதாகக் கூறினார்கள்.

அது உண்மையெனில் தேர்தலின் பின்னர் நான் ஆளுங்கட்சியுடன் பதவிகளை பெற்று அல்லவா இருந்திருக்க வேண்டும்? அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. கடந்த முறை 20 கோடி என்றவர்கள் இம்முறை 15 கோடி என்கிறார்கள். இது பொய்.

ரில்வின் சில்வாவின் கருத்தை கடுமையாக சாடிய கஜேந்திரகுமார்

ரில்வின் சில்வாவின் கருத்தை கடுமையாக சாடிய கஜேந்திரகுமார்

மக்களுக்காக குரல் 

கோடிகளுக்கு விலைபோகும் நபர் நான் கிடையாது. எனது தந்தை அமரர் சந்திரசேகரனின் வழியிலேயே நான் பயணிக்கின்றேன். கொள்கை அரசியலை முன்னெடுத்த தலைவரின் மகள் நான்.

தொலைக்காட்சி விவாதங்களில் அடித்துக்கொள்ளும் மலையக பிரதிநிதிகள்! குற்றஞ்சாட்டும் அனுஷா சந்திரசேகரன் | Anusha Chandrasekaran Denies Bribery Claims

எனவே, கோடிகளுக்கு விலைபோனவர்கள்தான் இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். மலையக மக்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை என என்னை பற்றி அறியாத சிலரே விமர்சிக்கின்றனர். திரைமறைவில் பல நலன்புரி திட்டங்களை முன்னெடுத்துவருகின்றேன்.

அவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை. இதற்கு நலன்விரும்பிகளும் உதவிகளை வழங்கிவருகின்றனர். மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை நிச்சயம் மாற்றம் வரும்.

பழைய அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்ததுபோதும், இளைஞர்கள், புதியவர்கள் வரவேண்டும் என மக்கள் கருதுகின்றனர். எனவே, மக்களுக்காக குரல் கொடுக்கும் என்னை அவர்கள் சபைக்கு அனுப்பி வைப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவேன்.” – என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, London, United Kingdom

25 Nov, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, ஜெயந்திநகர், வவுனியா

24 Nov, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கனடா, Canada

24 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை மேற்கு, மீசாலை வடக்கு

25 Oct, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014