இலங்கைக்கு ஜப்பான் வழங்கவுள்ள கப்பல்
இலங்கையின் கடல்சார் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் வகையில், மற்ற கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காக நீருக்கடியில் சோனார் பொருத்தப்பட்ட கப்பலை இலங்கைக்கு வழங்கும் திட்டத்தை ஜப்பான் (Japan) அரசாங்கம் இறுதி செய்துள்ளதாக ஜப்பானிய பிரதி செய்தித் தொடர்பாளர் கனேகோ மரிகோ (Kaneko Mariko) தெரிவித்துள்ளார்.
நேற்று (04) ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவுடன் (Yoko Kamikawa) இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போதே இந்த முடிவை அவர் அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜப்பானின் நிலைப்பாடு
"ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு மொத்தமாக சுமார் 01 பில்லியன் யென் (Yen) பெறுமதியான கப்பல் மற்றும் சோனார் அமைப்பை வழங்கவுள்ளது.
கமிகாவா, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை அடைவதில் ஜப்பானின் நிலைப்பாட்டை இங்கு வலியுறுத்த்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி, கடல் பாதைகளில் மூலோபாய நிலையில் அமர்ந்திருக்கும் இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |