சிறிலங்கா இராணுவத்திலிருந்து இரண்டு வாரங்களுக்குள் வெளியேற்றப்பட்ட படையினர்
சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின் தகவலின்படி, விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின் அறிவிப்பு
பொது மன்னிப்புக் காலத்தின் போது 9,770 இராணுவத்தினரை பதவி விலக்கியுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம்(sri lanka army headquarters) தெரிவித்துள்ளது.
மேலும், 9,735 ராணுவ வீரர்கள் தங்களது படைப்பிரிவு மையங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் 35 இராணுவ வீரர்களும்
அதுமட்டுமல்லாமல், தற்போது விடுமுறை எடுக்காமல் மற்றும் கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் 35 இராணுவ வீரர்களும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்பு காலம் மே 20 வரை செல்லுபடியாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |