ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை

Sri Lanka Tourism Sri Lanka President of Sri lanka Sri Lanka visa Department of Immigration & Emigration
By Sathangani May 05, 2024 05:29 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் சிறிலங்கா அதிபருக்கு அறிவித்துள்ளது.

புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே (Asia) அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை (Sri Lanka) தற்போது மாறியுள்ளதாக கடிதம் ஒன்றை அனுப்பி இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

1949 ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (Department of Immigration & Emigration) நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழமை போன்று ஆவணங்களை சரிபார்த்து விசா வசதிகள் வழங்கப்பட்டன.

14 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி: மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

14 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி: மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி

1949 முதல் 2012 வரை, ஒரு சில நாடுகளைத் தவிர, சுற்றுலா பயணிகளிடம் இருந்து இலங்கை அரசு விசா கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால் 2012இல் ஈரிஏ என்ற Electronic Travel Authorization முறை அறிமுகப்படுத்தப்பட்டு விசா கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை | Sri Lanka Has The Highest Visa Fees In Asia

அதன்படி, அவ்வப்போது விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்பட்டது.

2012 முதல் 2024 ஏப்ரல் இறுதி வரை, விசா வழங்கும் செயன்முறை தடையின்றி நடந்தது. எவ்வாறாயினும், இந்தச் செயற்பாட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இருந்து நீக்கி விஎப்எஸ் குளோபல் (VFS GLOBAL) என்ற தனியார் நிறுவனத்திற்கு சிறிலங்கா அமைச்சரவையின் (Cabinet of Sri Lanka) அங்கீகாரத்துடன் மாற்றுவதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, முதலில் நிகழ்நிலை வசதி மூலம் விசா வசதியும், பின்னர் ON ARRIVAL விசா வசதியும் அந்த தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

சாதாரண தர பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின

சாதாரண தர பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின

அதிகரிக்கப்பட்ட டொலர்கள்

அதனுடன் இதுவரையில் ON ARRIVAL விசா வசதியை வழங்கிய அரசாங்க இணையத்தளமான www.eta.gov.lk முடக்கப்பட்டு அதற்கு பதிலாக www.srilankaevisa.lk என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை | Sri Lanka Has The Highest Visa Fees In Asia

இதன் கீழ் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாள் விசாவிற்கு இதுவரை அறவிடப்பட்ட 60 டொலர்கள் 100.5 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த 100.5 டொலர்களில் 75 டொலர்கள் அரசாங்கத்துக்கும், மீதி 25.5 டொலர்கள் தனியார் நிறுவனத்துக்கும் சொந்தமாகும்.

மேலும், 2012 முதல் 2024 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், இலங்கைக்கு வருகை தரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசா கட்டணத்தை அறவிடுவதில்லை என அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்திருந்தது.

எனினும், அந்தக் கொள்கை முடிவை மாற்றி, புதிய முறையின் மூலம் சிறுவர்களுக்கும் 100.5 டொலர் விசா கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

களுத்துறையில் இசை நிகழ்ச்சிக்கு சென்ற சிறுவன் கத்தியால் குத்திக் கொலை!

களுத்துறையில் இசை நிகழ்ச்சிக்கு சென்ற சிறுவன் கத்தியால் குத்திக் கொலை!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

இதன்படி, தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அடங்கிய வெளிநாட்டுக் குடும்பம் இலங்கைக்கு வரும்போது விசா கட்டணமாக 400 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை | Sri Lanka Has The Highest Visa Fees In Asia

அத்துடன் சுற்றுலாப் பயணி ஒருவர் நிகழ்நிலையில் விசா வசதியைப் பெறும்போது, ​​அது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குத் அறியவந்தாலும் On Arrival முறை மூலம் வரும் சுற்றுலாப் பயணிக்கு வழங்கப்படும் விசா வசதி முதலாவது சந்தர்ப்பத்திலேயே திணைக்களத்திற்கு தெரியவராது.

இந்த நிலைமை 1949 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த பலரை உள்ளடக்கிய SLAITO என்ற பயண முகவர்களின் சம்மேளனம், சிறிலங்காஅதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தாய்லாந்து (Thailand), வியட்நாம் (Vietnam) மற்றும் இலவச விசா வழங்கும் அல்லது குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் போட்டி இடங்களுடன் ஒப்பிடும்போது, ​​சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க தடையை உருவாக்கி, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026