கோட்டாபயவின் வெற்றிக்காக மன்னிப்புக்கோரிய முன்னாள் இராணுவத்தளபதி
Gotabaya Rajapaksa
Sajith Premadasa
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Dhayani
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்த நபர் என்ற வகையில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச கடந்த காலங்களில் தம்மை திறமையானவர் என நிரூபித்திருந்த போதிலும் அதிபரான பின்னர் அவரிடம் குறைப்பாடுகள் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கோட்டாபய ராஜபக்சவை மோசடி செய்பவர் என தாம் நம்பவில்லை எனவும், சஜித் பிரேமதாச அதிபரானால் ஒதுங்கி நிற்காமல், பொறுப்புகளை ஏற்று நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி