அமெரிக்க வரிகள் நீக்கப்பட்டால் பேரழிவு: நீதிமன்றுக்கு ட்ரம்ப் பதிலடி
வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும் வரி விதிப்பு சட்டவிரோதமானது என அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம், ட்ரம்ப் விதித்திருக்கும் வரிகள் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.
வரி விதிப்பு
இருப்பினும், வரி விதிப்புகளை ரத்து செய்ய மறுத்துவிட்ட நீதிமன்றம், ஃபெடரல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல ட்ரம்புக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தீர்ப்பு மிகத் தவறானது அனைத்து வரிகளும் நடைமுறையில் இருக்கின்றன.
இன்று, பார்டிசன் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம், நம்முடைய வரி விதிப்புகள் நீக்கப்பட வேண்டும் என்று தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஆனால், அவர்களுக்குத் தெரியும் இறுதியில் நாம்தான் வெல்வோம் என்று, ஒருவேளை அமெரிக்க வரிகள் நீக்கப்பட்டால் அது நாட்டுக்கு பேரழிவாக மாறிவிடும்.
பல நாடுகள்
வர்த்தக சமநிலையின்மை மற்றும் நியாயமற்ற வரிகளை தொடர்ந்து நாடு தாங்கிக் கொண்டிருக்க முடியாது.
இதர நாடுகள் அமெரிக்காவுக்கு விதிக்கும் வரிகளை நாம் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமா அது நண்பர்களாக இருந்தாலும் சரி எதிரிகளாக இருந்தாலும் சரி” என அவர் தெரிவித்துள்ளார்.
தான்னால், உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்பு என்பது வர்த்தகப் போர் என்று குறிப்பிடும் ட்ரம்ப், இதுதான் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களைக் காக்க மிகச் சிறந்த கருவி என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக, பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதித்து வந்தன ஆனால் இப்போது அமெரிக்காவை பணக்கார, பலமான மற்றும் அதிகாரம் கொண்ட நாடாக மாற்ற நான் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

