சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு புறக்கணிப்பு
சிறிலங்காவின் 75ஆவது சுதந்திர தினத்தை புறக்கணிப்பதாக தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் இன்று(3) தனது புறக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு வாழ் தமிழ் மக்களும், தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் சிறிலங்காவின் 75ஆவது சுதந்திர தின விழாவை புறக்கணித்துள்ளனர்.
கறுப்பு நாள் பிரகடனம்
வடக்கு கிழக்கின் தொடர்ச்சியான இராணுவமயமாக்கல், போர்க்குற்ற விவகாரத்தில் நீதி இல்லாமை, இனப்படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறல், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு போன்ற விடயங்களால் தமிழர் தரப்பு சுதந்திர தின நிகழ்வை கறுப்பு நாளாக பிரகடனம் செய்துள்ளது.
இது தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது என தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் வன்முறை மற்றும் மிரட்டல்களுக்கு தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு கவலை வெளியிட்டுள்ளது.



