ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: வெளியான அறிவிப்பு
iPhone
Apple
Technology
Mobile Phones
By Shalini Balachandran
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகள் வெளியிடுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் அவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இந்த நிகழ்வை apple.com மற்றும் Apple TV செயலி ஊடாக நேரலையில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவுகள்
இந்நிலையில், புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகளுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், இவற்றின் நேரடி விற்பனை செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி