கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
2024 (2025) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (MOE) தெரிவித்துள்ளது.
அதற்கமைய தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை பெறுபேறுகள்
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அடுத்த அணியினருக்கான தேசிய கல்வியியற் கல்லூரிக்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அந்தவகையில் நாடளாவிய ரீதியில் உள்ள 19 தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் கற்கை நெறியைத் தொடர்வதற்கு மாணவர்கள் விணண்ப்பிக்க முடியும்.
எனவே மாணவர்கள் தங்களுக்கு பொருத்தமான கல்வியியற் கல்லூரிகளை தெரிவுசெய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |