அரச தலைவர் மற்றும் பிரதமரிடம் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள வேண்டுகோள்
வீழ்ச்சிக்கு காரணம்
லிட்ரோ நிறுவனத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு இவ்வருடம் பதவி விலகிய மூன்று தலைவர்களே பொறுப்பு என்றும், புதிய தலைவராக எரிவாயு வர்த்தகம் தொடர்பில் அறிந்த ஒருவரை நியமிக்குமாறு அரச தலைவர் மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு பாதுகாப்பு அமைப்பு இன்று (12) தெரிவித்துள்ளது.
அனுபவம் வாய்ந்த தலைவரை நியமிக்க வேண்டும்
Litro Gas இன் நிகழ்ச்சி மற்றும் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே கூறுகையில், நிறுவனத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு மேற்கண்ட விடயமே காரணம். அதிகாரிகள் இப்போது இராஜினாமா செய்யும் தலைவர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டு தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்கக்கூடிய பாரிய அனுபவம் வாய்ந்த தலைவரை நியமிக்க வேண்டும் என்றார்.
Litro 2019 இல் பொது திறைசேரிக்கு 14 பில்லியன் ரூபாயை ஈவுத்தொகையாகவும், 37 மில்லியன் ரூபா வரியாகவும் செலுத்திய நிலையில் 20 பில்லியன் ரூபா சேமிப்பைக் கொண்டிருந்தது என்றும் ஹெட்டிகே தெரிவித்தார்.
