மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆணையாளர் நாயகம் இன்று (01) காலை கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தனது உத்தியோகபூர்வ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமையேற்றல் நிகழ்வு
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த கடமையேற்றல் நிகழ்வு நடைபெற்றது.

கொழும்பு, ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி கிரிந்தே அஸ்ஸஜி நாய்மி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் சமய வழிபாடுகளுக்கு மத்தியில் புதிய ஆணையாளர் நாயகம் தனது கடமைகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |