சீதுவ - கிரிந்திகொட சம்பவம் : விசேட காவல்துறை குழு நியமனம்
சீதுவ - கிரிந்திகொட பிரதேசத்தில் பயணப்பை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(15) குறித்த பிரதேசத்தில் பயணப்பையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதோடு, சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தெரிவிக்கையில்,
மேலதிக விசாரணை விபரங்கள்
“சடலம் காணப்பட்ட பையிலிருந்து வெற்று போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. குறித்த நபர் கொல்லப்பட்டு பயணப் பையில் வைத்து தடுகங் ஓயாவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம்.
பயணப் பையில் இருந்து நபரொருவரின் கை தென்படுவதாக காவல்துறையின் அவசர இலக்கத்திற்கு நேற்று பிற்பகல் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிவப்பு நிற மேல் சட்டை மற்றும் பழுப்பு நிற கால்சட்டை அணிந்திருந்த குறித்த நபர் கழுத்தில் வலப்புறம் 7 நட்சத்திரங்கள் கொண்ட பச்சை குத்தியுள்ளார்.
மீட்கப்பட்ட குறித்த சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 8 மணி நேரம் முன்