அதிர வைக்கும் பிரேதப் பரிசோதனை - சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர்; கழுத்து நெரித்துக் கொலை
கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் இயன்முறை சிகிச்சையாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் உடற்பயிற்சி நிபுணர் மரணம், கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கொலை என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துணி, கயிறு அல்லது அது போன்றதொரு பொருளைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்தே இப்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என வைத்திய அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
சந்தேகநபரான காதலன் கைது
தெல்தெனியாவில் வாகனத்தில் சடலமாகக் மீட்க்கப்பட்ட இளம் இயன்முறை சிகிச்சையாளரின் (Physiotherapist) தொடர்பில் சந்தேகநபரான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்லேகல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபரும், அவரது 35 வயதுடைய மனைவியும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி - கைதடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுள்ளனர்.
தற்கொலை அல்ல
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது, "தான் அறைக்குள் சென்ற போது குறித்த பெண் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் செய்துகொண்டிருந்தார் எனவும், பயத்தினாலேயே சடலத்தைக் காரில் ஏற்றி வந்து தெல்தெனியவில் கைவிட்டதாகவும்" வாக்குமூலம் அளித்திருந்தார்.

எனினும், தெல்தெனிய சட்ட வைத்திய அதிகாரி கே.எஸ். பண்டாரவினால் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், இது தற்கொலை அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 6 மணி நேரம் முன்