2027 ஆம் ஆண்டின் அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் : வெளியான வர்த்தமானி
2027 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச் அபயரத்ன இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, விடுமுறைைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவினாால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
இந்தநிலையில், வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகள் 2027ஆம் ஆண்டுக்கான அரசாாங்க மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2027 ஆம் ஆண்டில் 25 திகதிகள் அரசாங்க மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் மார்ச் மற்றும் மே ஆகிய மாதங்களில் 4 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 3 நாட்களும், ஜனவரி, பெப்ரவரி, ஓகஸ்ட், ஒக்டோபர், டிசம்பர் மாதங்களில் 2 நாட்களும், ஏனைய மாதங்களில் 1 நாளும் அரசாங்க மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்