ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
வடக்கு ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (25) வியாழக்கிழமை காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள்
இவாத்தேவின் வடக்கு பகுதிக்கு அப்பால் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளியின் ஆழம் 50 கிலோ மீற்றராக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, தோஹோகு ஷின்கான்சென் அதிவேக தொடருந்து சேவைகள் உட்பட சில தொடருந்துகளை நிறுத்தியுள்ளதாக கிழக்கு ஜப்பான் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வெனிசுலாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 மணி நேரம் முன்