எரிபொருள் விலை மாற்றம் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
எரிபொருள் விலை மாற்றம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக இன்று(25) நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, உலகளாவிய விலைகள் குறையும் போது மக்களுக்கு எரிபொருள் விலையில் சலுகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கியூஆர் ஒதுக்கீடு
அத்தோடு, உலக சந்தையின் விலை மாற்றங்கள், ஓகஸ்ட் மாதம் அளவிலேயே இலங்கை போன்ற நாடுகளில் பிரதிபலிக்கும் என்றும், அதுவரை எரிபொருள் வழங்குவதற்கான கியூஆர் ஒதுக்கீட்டு முறை தொடரும் எனவும் அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை வழக்கமாக மாதாந்திர அடிப்படையிலேயே எரிபொருளுக்கான ஓடர்களை மேற்கொள்வதால், உலக சந்தை விலை மாற்றங்கள் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்