மீண்டும் வழமைக்கு திரும்பிய கடவுச்சீட்டு விநியோகம்!
புதிய இணைப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட அவசர செயலிழப்பு தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செயலிழப்புக்கு உள்ளான கணினி அமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று முற்பகல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
கடவுச்சீட்டு விநியோகத்தில் சிக்கல் : வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் இன்று (11) காலை கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சரிசெய்ய நடவடிக்கை
இந்த நிலையில் கணினி அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டுத் தலைவர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |