அமெரிக்கா - வெனிசுலா விவகாரம்! அநுர அரசாங்கத்தின் நடத்தைகள் தொடர்பில் கேள்வி
வெனிசுலா மீதான அமெரிக்க படையெடுப்பு தொடர்பாக அரசாங்கம் மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்க தூதரகம் சுற்றிவளைப்பு
அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை பலமுறை சுற்றி வளைத்தனர்.
ஆனால் இந்த விடயத்தில் தேசிய மக்கள் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஏன் அமைதியாகவும், மென்மையான அணுகுமுறையையும் பின்பற்றுகின்றன,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“உங்களுடன் இருந்து பிரிந்து சென்ற குழு அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் ஒரு போராட்டத்தை நடத்தியது, ஆனால் நீங்கள் அமைதியாக இருந்தீர்கள்,” எனவும் சாமர அரசாங்க இருக்கைகளில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 7 மணி நேரம் முன்