அப்புக்குட்டி ராஜகோபாலுக்கு மதிப்பளிப்பு
IBC Tamil
Tamils
France
By Dilakshan
ஐபிசி தமிழால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்ட ஈழத்தின் மூத்த கலைஞரும் அப்புக்குட்டி என்ற நகைச்சுவைப் பாத்திரத்தால் அடையாளப்படுத்தபட்டு வருபவருமான கோமாளிகள் புகழ் ரி.ராஜகோபாலுக்கு நேற்று அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களால் பிரான்சில் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
அவரது 83 வது அகவை நாளில் சென்ற் மார்ட் பகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதன்போது, ராஜகோபாலின் நீண்ட கால கலைத்துறை பங்களிப்பை விவரணப்படுத்தும் வகையில் வாழ்த்துரைகளுடன் கூடிய ஆவணத்தொகுப்பு ஒன்றும் திரையிடப்பட்டுள்ளது.
சுகயீன நிலையில் இருந்து குணமடைந்து மீண்டும் தனது அபிமானிகள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பிரசன்னப்பட்ட ராஜகோபால் இந்த நிகழ்வால் மகிழ்சியடைந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி