அன்றைய அரபு - இஸ்ரேல் போரும் : இன்றைய ஹமாஸ் போரும்
சரியாக 50 ஆண்டுகளுக்கு முன் இதே ஒக்டோபர் மாதத்தில் அரபு - இஸ்ரேல் போர் நடந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அப்போர் ஏற்படுத்திய தாக்கங்களையும், அன்றைய போருக்கும், இப்போதைய இஸ்ரேல் ஹமாஸ் போருக்குமான ஒற்றுமைகள் என்ன என்பதனை இப்பதின் ஊடாக காணலாம்.
அரபு - இஸ்ரேல் போர்
1973 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அரபு - இஸ்ரேல் போர் நடந்தது.
இது ஒக்டோபர் போர் அல்லது யோம் கிப்பூர் போர் என அழைக்கப்பட்டது. இது 4ஆவது அரபு - இஸ்ரேல் போர் ஆகும்.
மிக குறுகிய கால போராகவும் இது காணப்பட்டது. அதாவது, ஒக்டோபர் 6 முதல் 25ஆம் திகதி வரையே இப்போரானது நீடித்தது. ஆனால், இப்போர் ஏற்படுத்திய தாக்கம் என்பது இன்றுவரையிலும் நீங்காத வடுவாகவே உள்ளது.
பின்னணி
60களின் இறுதியில் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவியது. 1967இல் நடந்த அரபு - இஸ்ரேல் போரில், சினாய் தீபகற்பம், கோலன் குன்றுகள் உள்ளிட்ட அரபு பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
அதனை தொடர்நது அவ்வப்போது சண்டைகள் நடந்துக்கொண்டிருந்தன. இந்நிலையில் 1973 ஒக்டோபர் 6ஆம் திகதி, தீவிரமான போராக உருமாறியது.
யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் நாளிலேயே இப்போர் மூண்டது.
இருதரப்பிலும் மிகப்பெரிய உயிர்ச்தேங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டன.
இறுதியில், ஒக்டோபர் 25 வரை நீடித்த போர் இறுதியில் போர் நிறுத்த உடன்பாட்டினை எட்டியது. இந்நிலையில் அரபு நாடுகள் எண்ணெய் விலைகளை அதிகரிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில், ஒக்டோபர் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் 338ஆவது தீர்மானத்தை ஏற்றது. அத்துடன், 339,340 தீர்மானங்களின் மூலமாகவும் போர் நிறுத்ததிற்கான அழைப்பை விடுத்தது. சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அப்போர் முடிவிற்கு வந்தது.
ஹமாஸ் போர்
இதனை கருத்திற் கொண்டு இன்றைய போர் நிலைமைகளை உற்று நோக்குவோமாயின், இன்றைய போரும் யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் நாளிலேயே இடம்பெற்றுள்ளது.
அன்று போலவே இன்றும் ஆயிரக்கணக்கிலான உயிர், உடமை சேதங்கள் ஏற்பட்டு வருகின்றமையினை அவதானிக்கலாம்.