உலகையே அலற விடும் ஹமாஸ்! இஸ்ரேலின் மாற்று நடவடிக்கை
காசா மீதான பாரிய படைய நடவடிக்கைக்காக இஸ்ரேலிய இராணுவத்தின் 35 படைப்பிரிவுகள் காசா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால் இஸ்ரேல் எந்த நேரமும் காசாவில் ஒரு பெரிய தரைப்படை நடவடிக்கையை ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படை நகர்வுக்கு முன்னோடியாக காசா மீதான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்றிரவும் 200 மேற்பட்ட இடங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமையான தாக்குலை நடத்தியுள்ளன.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல்களில் 123 இஸ்ரேலிய படையினர் பலியான விடயத்தை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய தாக்குதல்
காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேலிய வான்தாக்குதல்களால் இடிபாடுகள் அதிகரித்து வருகின்றன.
பல்கலைக்கழக கட்டிடங்கள், உள்கட்டமைப்பு கட்டிடங்கள் மசூதிகள் மற்றும் காவல்நிலையங்கள் யாவும் இந்தத் தாக்குதல்களில் அழிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 770 ஐ தாண்டியுள்ளது. 4,100 பேர் காயமடைந்துள்ளனர்.
17 ஆண்டுகளாக உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள காசா மீதான முழு முற்றுகைக்குரிய ஒரு உத்தரவை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் விடுத்த பின்னணியில் உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறையென மனித உரிமை கண்காணிப்பகத்தால் விவரிக்கப்படும் காசாவில் தற்போது மின்சாரம் உட்பட்ட முக்கிய விநியோகங்கள் இஸ்ரேலால் முடக்கப்பட்டுள்ளன.
காசா மக்கள் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குதலை நடத்தும் ஒவ்வொரு முறையும் தம்மிடம் உள்ள பணயக்கைதிகளை கொல்லப்போவதாக ஹமாஸ் எச்சரித்த நிலையிலும் இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் தொடர்கின்றன.
அமெரிக்க தலையீடு
தற்போது காசாவில் 187,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் - இந்தத்தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசா மக்களுக்கான உணவு விநியோக மையங்கள் மூடப்பட்டதால், கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் இந்த வாரத்துக்குரிய ஐ.நா.வின் உணவு நிவாரணத்தை பெற முடியவில்லை.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அன்ரனி பிளிங்கன், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் எலி கோஹனுடன் பேசிய போது இஸ்ரேலுக்கான ஆதரவு குறித்து விவாதித்ததுடன் ஹமாசிடம் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிப்பதற்கான அமெரிக்க முயற்சிகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.