பதவி ஆசையில் விக்னேஸ்வரன்..! வெளிப்பட்ட சுயரூபம்
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தனது சுயநலன்களுக்காக கூட்டணிக்கட்சியின் தலைவர்களை பயன்படுத்தி இருக்கிறார் என அரசியல் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்று சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.
தனித்து எடுக்கப்படும் முடிவுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த ஒரு முக்கியமான தீர்மானங்களும் கட்சியினுடைய(தமிழ் மக்கள் கூட்டணி) மத்திய குழுவின் அல்லது செயற்பாட்டுக் குழுவின் கலந்துரையாடல் அல்லது ஆலோசனையின் படி எடுக்கப்படுவதில்லை.
விக்னேஸ்வரன் ஐயா என்பவர் தான் கட்சி - தான் தான் முடிவு என்ற வகையில் தான் முடிவுகளை எடுப்பார்.
கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாத வகையில் நேரத்துக்கு நேரம் ஒரு தீர்மானத்தை எடுத்து அவர் நடைமுறைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.
இவ்வாறு கூறிய பொழுது அதற்கு விக்னேஸ்வரன் ஐயா தலை தீர்மானிக்கும் படி தான் வால்கள் செயற்பட வேண்டுமென எம்மிடம் கூறியிருக்கிறார்.
அவர் நீதிபதியின் பண்பாட்டில் இருந்து தான் கட்சி அரசியலையும் சிந்திக்கின்றார். அந்த நடவடிக்கை தற்பொழுது பொது வெளியிலும் தெரிய வருகிறது.
அவரது கடந்த கால செயற்பாடுகளை நோக்கின் முன்னுக்குப் பின் முரணான வகையில் தான் செயற்பட்டு வருகிறார்.
விக்னேஸ்வரன் ஐயாவை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக எடுத்த முயற்சிகள், ஆதரவுகளுக்காக பொதுமக்கள் மத்தியில் கூட நான் மன்னிப்பை கோரி இருக்கிறேன்.
இந்த விடயத்தில் நான் தவறான முடிவை எடுத்து விட்டேன். அந்த விடயம் உடனடியாக தெரிய வில்லை, எனினும் விக்னேஸ்வரன் ஐயாவின் சுயரூபங்கள் தெரிய வரத் தான் அந்த தவறு தெரிந்தது” என்றார்.
