தென்னிலங்கை வன்முறைகளின் பின்னணியில் கோட்டாபய: அம்பலப்படுத்திய சரத் பொன்சேகா
தென்னிலங்கையில் நடைபெற்ற பல வன்முறை செயல்களுக்குப் பின்னணியில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான குழுவினரே இருந்தார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் கூறுகையில்,
கோட்டாபய ராஜபக்சவின் குழு
இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் பொதுவாக இது தொடர்பில் குற்றம் சுமத்தக்கூடாது, தான் இராணுவத் தளபதியாக செயற்பட்ட போது கொழும்பில் சில நடவடிக்கைகளுக்கு நேரடியாக உத்தரவு வழங்கவில்லை எனவும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தற்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயும் கோட்டாபய ராஜபக்சவின் குழுவில் இடம்பெற்றிருந்ததாக பொன்சேகா வெளிப்படுத்தியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
