போதைப்பொருள் பாவனை அதிகரித்தமைக்கு காலிமுகத்திடல் போராட்டமே காரணம் : டிரான் அலஸ் குற்றச்சாட்டு!
இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டங்கள் காரணமாக நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், காலிமுகத்திடல் போராட்டங்கள் காரணமாக பாதாளக்குழு செயற்பாடுகளும் அதிகரித்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், காலிமுகத்திடல் போராட்டத்தை கண்காணிக்கும் பணிகளில் சிறிலங்கா காவல்துறையினர் தொடர்ந்தும் செயல்பட்டு வந்த காரணத்தால், ஏனைய விடயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியாது போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கைகள்
இலங்கையில் அதிகரித்துள்ள பாதாளக்குழுக்களின் செயல்பாடுகளை குறைப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக டிரான் அலஸ் கூறியுள்ளார்.
அத்துடன், இவ்வாறாக போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா காவல்துறை
சிறிலங்கா காவல்துறையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படுவதாக டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சுமார் இரண்டு ஆயிரம் கால்துறையினர் இந்த ஆண்டில் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை! மறுக்கப்படும் நுழைவு விசா: பொங்கியெழும் சரத் வீரசேகர
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், குறித்த வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் பணிகள் தற்போது படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேலும் 5 ஆயிரம் காவல்துறையினரை அடுத்த ஆண்டில் சேவையில் இணைத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |