மகிந்தவின் மேடையில் தனக்கு பிடித்த மிருகம் புலி என்றாராம்: அப்படியென்றால் அர்ச்சுனா சொன்னது...

Sonnalum Kuttram Ramanathan Archchuna NPP Government
By Dharu Sep 19, 2026 02:00 AM GMT
Report

அநுராதப்புரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களில்,  விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும், தமிழ் புலம்பெயர் சமூகம் (Tiger Diaspora) பற்றி ஒன்றையும் குறிப்பிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா புலி என்ற சொல்லை குறித்த மேடையில் பயன்படுத்தியதன் காரணம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் எழுப்பி கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

தன்னை அந்த விலங்குடன் ஒப்பிடுவதில் தவறில்லை என குறிப்பிட்ட அவர், தான் ஒருபோதும் விடுதலைப்புலிகளின் அமைப்பை மையப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

தான் 'புலி' என்ற மிருகத்தையே குறிப்பிட்டதாகவும், அது தனக்குப் பிடித்தமான மிருகம் என தெரிவித்துள்ளார்.  

சிலருக்கு யானைகளைப் பிடிக்கும், சிலருக்கு பாம்புகளைப் பிடிக்கும். எனக்குப் புலிகளைப் பிடிக்கும் என அர்ச்சுனா இதன்போது பதில் வழங்கியுள்ளார்.

தாம் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பு என்று கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களையே 'புலம்பெயர்ந்தோர்' எனக் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் மறுசீரமைப்பிற்கு அவர்கள் அளித்த நிதியைப் பெற்றுக்கொண்டு அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தான் ஒரு மருத்துவராக களுபோவில, பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றி, சிங்கள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆயுதம் ஏந்தும் எண்ணம் கொண்டவன் தான் அல்ல என அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கோ அல்லது கைதுக்கோ தான் அஞ்சவில்லை.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தன்னை விசாரிக்க விரும்பினால் வாட்ஸ்அப் மூலம் இருப்பிடத்தை அனுப்பினால் போதுமானது.

செருப்பு மற்றும் சாதாரண உடையில் தானாகவே நேரில் வரத் தயார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாதாரண மனிதர்களை இலக்கு வைப்பதை விட்டுவிட்டு, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரன் போன்ற பெரிய குற்றவாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

 மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்ததற்காகத் தற்போது வெட்கப்படுவதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

கருணா, பிள்ளையானை போல அர்ச்சுனாவையும் மாற்றி விட்டோம் : மார்தட்டுகிறது மகிந்த தரப்பு

கருணா, பிள்ளையானை போல அர்ச்சுனாவையும் மாற்றி விட்டோம் : மார்தட்டுகிறது மகிந்த தரப்பு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்!

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்