யாழில் காவல்துறையினர் மறித்த வேளை கீழே விழுந்து இளைஞன் திடீர் மரணம்!
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை காவல்துறையினர் மறித்த வேளை அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக இன்றையதினம் (19) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை மானிப்பாய் போக்குவரத்து காவல்துறையினர் மறித்துள்ளனர்.

இதன் போது குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குறித்த இடத்திலேயே அந்த இளைஞர் அசைவற்று காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |