சுமந்திரனின் 3 மணிநேர கதவடைப்பு போராட்டம் - அர்ச்சுனா எம்.பி கடும் எதிர்ப்பு
நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கதவடைப்பு போராட்டம் ஏற்புடையதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக கதவடைப்பு இன்று (18) திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும் அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அர்ச்சுனா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள நேரலையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
கதவடைப்பு போராட்டம் ஏற்புடையதல்ல
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் நடத்தப்படவிருந்த கடையடைப்பு போராட்டம், இன்றைய தினத்திற்கு (18) மாற்றப்பட்டது.
மடு மாதா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதன் காரணமாக சுமந்திரன் இந்த முடிவை எடுத்ததாக சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்துக்களின் நல்லூர் திருவிழா இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான கதவடைப்பு போராட்டம் ஏற்புடையதல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இவ்வாறான போராட்டங்கள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வடக்கில் வாழ்பவர்கள் கதவடைப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

