மாகாணசபையை இலக்கு வைத்து இனவாதம் கிளப்பும் சுமந்திரன்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இழந்த செல்வாக்கை பெறுவதற்காக தமிழ் மக்களிடையே இனவாதத்தை உருவாக்கி மக்கள் மத்தியிலே கிளர்ச்சியை ஏற்படுத்தி வெற்றி பெற முயற்சிக்க வேண்டாம் என சட்டத்தரணி சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) எமது தலைமுறையின் கட்சி தலைவர் கருணாநிதி சுட்டிக்காட்டியு்ளளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவத்தை அகற்றுவதற்கு நாட்டின் ஜனாதிபதி அநுரவிற்குதான் (Anura Kumara Dissanayake) அதிகாரம் உள்ளதே தவிர சுமந்திரனுக்கு இல்லை என்பதை மிகத்தெளிவாக நாங்கள் தெரிவித்து கொள்கின்றோம்.
இந்தநிலையில், இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு எவரும் ஆதரவளிக்க தேவையில்லை.
இதனடிப்படையில், நாளை (18) அனைத்து கடைகளும் திறக்கப்பட வேண்டும் என்பதுடன் மக்கள் சுயமாக செயற்பட வேண்டும் என கேட்டு கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் அரசியல் தலைமைகள், வடக்கில் இராணுவ ஆதக்கம், அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

