காட்டிக் கொடுத்த வைத்தியர் சத்தியமூர்த்தி : சபையில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி
புதுமாத்தளன் வைத்தியசாலையில் விடுதலைப்புலிகளால் சொல்லப்பட்டு தான் அவ்வளவு கொலைகள் இடம்பெற்றதாக யாழ் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna) பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, சி.என்.என் (CNN) தொலைக்காட்சிக்கு 2009 இல் பேட்டியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
அத்துடன் என்னுடைய தந்தை 2009ஆம் ஆண்டு புதுமாத்தளன் வைத்தியசாலையில் கால் வெட்டப்பட்டு காயமடைந்த நிலையில் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டு பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் சுகாதாரத்துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து நேற்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடக்கவில்லை, அங்கே எமது உறவுகள் இறக்கவில்லை என சொன்னதற்கு பரிகாரமாக கடந்த கால அரசாங்கம் வாரிய சான்றிதழ் (Board Certification) இன்றி அமைச்சரவையில் அனுமதி பெற்று வாரிய சான்றிதழை வழங்கி விட்டு வைத்தியர் சத்தியமூர்த்தியை பணியில் அமர்த்தியுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு வெளிநாடுகளில் புலம்பெயர் உறவுகள் கோடிக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளனர். இதில் ஏதாவதொரு கணக்கு சுகாதார அமைச்சுக்கு ( Ministry of health) தெரியுமா என்று கேட்டுக்கொள்கின்றேன்.
வைத்தியர் சத்தியமூர்த்தி தான் ஒரு கண் வைத்தியசாலை கட்டவுள்ளதாகவும் அதற்கு பணம் அனுப்புமாறு புலம்பெயர் உறவுகளிடம் கோரியுள்ளார். இந்த விடயம் சுகாதார அமைச்சுக்கு தெரியுமா.
அதாவது வெளிநாட்டிலே கறுப்பு பணமாக உள்ள எங்களுடைய தேசியத் தலைவனின் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்கு தங்கமுத்து சத்தியமூர்த்தியுடனும் சுவிஸில் இருந்து வந்திருக்கின்ற அவருடைய அடியாட்களுடனும் சேர்ந்து சுகாதார அமைச்சர் மறுபடியும் டீல் போட்டுள்ளார்.
திருடரைப் பிடிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது திருடரைப் பாதுகாக்கின்றது. தங்கமுத்து சத்தியமூர்த்தியின் Welfare Societyக்கு வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பணத்தைப் பெற்றுக்கொள்கின்றார் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் நான் மீண்டும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |