நாடாளுமன்றில் கொந்தளித்த அர்ச்சுனா : இடைநிறுத்திய சபாநாயகரால் சலசலப்பு
கடந்த 29 ஆம் திகதி அநுராதபுரம் (Anuradhapura) காவல்துறையினரால், யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Archchuna Ramanathan) கைது செய்யப்பட்டிருந்தார்.
தனது வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகளைப் பயன்படுத்தியதற்காக ரம்பேவ பகுதியில் வைத்து அர்ச்சுனா இராமநாதன் காவல்துறையினரால் வழி மறிக்கப்பட்டார்.
காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கருத்து இன்றைய தினம் (05) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா இராமநாதன் தனது உரையை தமிழில் ஆற்றுவதாக தெரிவித்து உரையை ஆற்றினார்.
இதன்போது, இடைமறித்த சபாநாகர் தாங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுவதாக தான் அறிவித்து இருந்தீர்கள் ஆகையால் உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துமாறு அர்ச்சுனா இராமநாதனை இடைநிறுத்தினார்.
இதையடுத்து, தனது உரையை தமிழில் தொடர்வதை நிறுத்தி ஆங்கிலத்தில் ஆரம்பித்து தனது முறையீட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |