மலையகத்திலும் அரசியல் செய்வேன்! அநுர தரப்புக்கு அர்ச்சுனா எச்சரிக்கை
மலையக மக்களுக்காக போலி அரசியலை செய்பவர்களுக்கு ஒருநாள் தகுந்த பாடத்தை கற்பிப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“மலைய மக்களுக்கு நீங்கள் வழங்கிய 200 சம்பள உயர்வு என்பது பிச்சையை போன்றது.
பிழையான விடயங்கள்
ஒரு இராத்தல் பாணின் விலை 160 ரூபாய். இந்த உயர்வை வழங்குவது ஒரு தரப்பு.

அதனை எதிர்க்கும் மற்றொரு தரப்பு. இது வேடிக்கையானது. இந்த உயர்வை கொண்டு பத்துபேரை கொண்ட குடும்பம் எவ்வாறு வாழமுடியும்.
அரசாங்க தரப்பினர் பிழையான விடயங்களை வெளிப்படுத்தி, எதிர் தரப்பின் கதைகளை திரிபுபடுத்தி மலையக மக்களுக்கு எதிரான போராட்டம் என கதைக்கின்றார்கள்.
என்றாவது ஒருநாள் நான் மலையகத்திற்கு வருவேன். மலையகம் முட்டாள்களை நாடாளுமன்றுக்கு அனுப்பியுள்ளது.
தனது இனத்துக்காக 75 வருடங்களாக அட்டைக்கடியில் தொழில் செய்து அவர்கள் கஸ்ட்டப்படுகின்றனர்.
இன்றுவரை எவரும் முறைப்படி அந்த மக்களுக்காக போராடவில்லை” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |