அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் பணிப்பாளர் கேதீஸ்வரன் சான்றுரை!

Jaffna Law and Order Ramanathan Archchuna
By Jaso Mar 28, 2026 06:22 PM GMT
Report

யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ முனைவர் கேதீஸ்வரன் அவர்களால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (27.03.2026) அன்று பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகப் பணிப்பாளர் கேதீஸ்வரன் சான்றுரைத்தார்.

கடந்த 04.07.2024 அன்று சாவகச்சேரி அடிப்படை மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக மருத்துவர் அர்ச்சுனா பணியாற்றிய போது, யாழ்ப்பாண மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலி நிவாரணிகளை போதை மருந்துகளாக மருந்தகங்கள் வழியாகப் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விற்பதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.

காணொளி வெளியீடு : ஏற்றுக்கொண்ட அர்ச்சுனா

இந்தக் கூற்றுத் தொடர்பிலேயே இந்த அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கின் முன்னாய்வின் போது, அக்குறிப்பிட்ட காணொளி தன்னால் தான் பதிவேற்றம் செய்யப்பட்டதையும், அச்செய்தி தன்னால் தான் கூறப்பட்டதையும் அர்ச்சுனா ஏற்றுக்கொண்டிருந்தார்.

அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் பணிப்பாளர் கேதீஸ்வரன் சான்றுரை! | Archuna Director Ketheeswaran In Court

மேலும், அக்குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நீதிமன்றத்தில் மெய்ப்பிப்பார் எனத் தமது மறுமொழியிலும் குறிப்பிட்டிருந்தார். 

கடந்த வெள்ளிக்கிழமை (27.03.2026) சான்றுரைத்த மருத்துவர் கேதீஸ்வரன், தமது பணிக்காலத்தில் வலி நிவாரணிகளை மருத்துவச் சீட்டு இல்லாமல் வழங்கப்படுவது தொடர்பாக வந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், அது தொடர்பில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையொன்றின் மூலம் நீதிமன்றத்தில் சான்றுகளுடன் சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக மருந்தகங்கள், அரச மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ நிலையங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சான்றுகளின் அடிப்படையில் தமது கருத்துகளை முன்வைத்தார்.

இவ்வழக்கு விசாரணையின் போது மருத்துவர் அர்ச்சுனாவினால் வெளியிடப்பட்ட காணொளி நீதிமன்றத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல்

பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல்

35 ஆண்டுகால மருத்துவச் சேவையில் பொய் குற்றச்சாட்டு 

அக்காணொளி திரையிடப்பட்ட போது மருத்துவர் அர்ச்சுனாவும் நேரடியாக மன்றில் உடனிருந்தார். மேலும் சான்றுரைத்த பணிப்பாளர் கேதீஸ்வரன், தமது 35 ஆண்டுகால மருத்துவச் சேவையில் தம்மீது எவ்வித இழுக்கும் ஏற்பட்டிருக்காத நிலையில், மிகவும் பொய்யாக முன்வைக்கப்பட்ட இக்குற்றச்சாட்டானது தம்மைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் பணிப்பாளர் கேதீஸ்வரன் சான்றுரை! | Archuna Director Ketheeswaran In Court

குறிப்பாக இந்தக் காணொளியை அர்ச்சுனா வெளியிட்டதன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து பலர் தம்மை அச்சுறுத்தியதோடு, தமது குடும்பத்தினரையும் மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் சான்றுரைத்தார்.

பணிப்பாளர் மருத்துவ முனைவர் கேதீஸ்வரன், அடுத்த அமர்வின் போது மருத்துவர் அர்ச்சுனாவின் வழக்கறிஞரால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

பணிப்பாளர் கேதீஸ்வரன் சார்பில் சட்டத்தரணிகளான க. குமணன், த. தினேசு, சி. அபினாஸ் ஆகியோரின் துணையுடன் சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகியிருந்தார். மருத்துவர் அர்ச்சுனா சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனின் அறிவுறுத்தலில் மூத்த சட்டத்தரணி சி. கனகசிங்கம் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி காவல்துறை உத்தியோகத்தர் பலி!

யாழில் சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி காவல்துறை உத்தியோகத்தர் பலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019