யாழில் சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி காவல்துறை உத்தியோகத்தர் பலி!

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Independent Writer Mar 28, 2026 10:38 AM GMT
Report

புதிய இணைப்பு

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதி காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததோடு பிறிதொரு காவல்துறை உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த விபத்து யாழ். தென்மராட்சி கெற்பேலி, வீரபத்திரர் கோவிலடியில் இன்று (28) காலை 8:25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து கொடிகாமம் காவ்துறையினர் இருவர் சம்பவ இடத்துக்கு சென்ற நிலையில்  மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை வழி மறித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம்

உழவு இயந்திரம் நிறுத்தாது காவல்துறை உத்தியோகத்தர்களை மோதி தள்ளியதோடு நிறுத்தாமல் சென்றதனால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் காயம் அடைந்துள்ளார்.

யாழில் சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி காவல்துறை உத்தியோகத்தர் பலி! | Policeman Killed In Tractor Collision In Jaffna

இந்த சம்பவத்தை அடுத்து கிளாலியில் வைத்து குறித்த உழவு இயந்திரத்தை கைப்பற்றியதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய ஹெட்டியாராட்சிக்கே அல்பேட் என்ற காவல்துறை உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.

மேலதிக தகவல்கள் -  கஜிந்தன் , பிரதீபன்

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது, உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து காவல்துறை குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் அறிவிப்பு

யாழ். தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் அறிவிப்பு

காவல்துறை குழுக்கள் 

இவ்வாறு உழவு இயந்திரம் மோதியதில் காவல்துறை சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பேட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழில் சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி காவல்துறை உத்தியோகத்தர் பலி! | Policeman Killed In Tractor Collision In Jaffna

இந்தநிலையில் உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய விசேட காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்! அறிமுகமாகும் புதிய பயண சீட்டு முறை

தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்! அறிமுகமாகும் புதிய பயண சீட்டு முறை

ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை : அமெரிக்கா நம்பிக்கை

ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை : அமெரிக்கா நம்பிக்கை

செய்திகள் - கஜிந்தன் , பிரதீபன்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019