தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்! அறிமுகமாகும் புதிய பயண சீட்டு முறை
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் முன்முயற்சியின் கீழ், நாடு முழுவதும் பாரம்பரிய காகிதச் சீட்டுகளுக்குப் பதிலாக புதிய இணையவழி பயண சீட்டுக்கள் முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த திட்டமானது ஏப்ரல் மாதம் முதல் களனிப் பள்ளத்தாக்குத் தொடருந்துப் பாதை வழித்தடத்தில் உள்ள நாரஹேன்பிட்ட, நீர்கோழும்பு, மாகும்புர, ஹோமகம மற்றும் பாதுக்க போன்ற தொடருந்து நிலையங்களில் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் நடவடிக்கையை மேம்படுத்த நடவடிக்கை
இதன்போது நவீன பயண சீட்டுகள் சரிபார்ப்பு உபகரணங்களும் உபயோகிக்கப்படவுள்ள நிலையில், குறித்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் பயணிகள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். .

இந்த அமைப்பை களினி பள்ளத்தாக்கு வழித்தடத்தில் உள்ள அனைத்து தொடருந்து நிலையங்களுக்கும் விரிவுபடுத்தி, பின்னர் நாடு முழுவதும் உள்ள மற்ற தொடருந்து பாதைகளுக்கும் இதை விரிவுபடுத்த தொடருந்து திணைக்களத்தின் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த திட்டத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |