சுகாதாரத் துறையின் சீர்கேடுகளை சபையில் பகிரங்கப்படுத்திய அர்ச்சுனா எம்.பி
புதிய இணைப்பு
மன்னார் வைத்தியசாலையில் கடந்த வருடம் அனுமதிக்கப்பட்ட சிந்துஜா என்ற பெண் வைத்தியர்களின் கவனக்குறைவினால் உயிரிழந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அந்த பெண்ணின் மரணத்துடன் சம்மந்தப்பட்ட வைத்திய அதிகாரிக்கோ தாதியருக்கோ எதிராக இன்று வரை சுகாதார அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், Hamdi Fazleen என்ற 3 வயது குழந்தையின் இரண்டு சிறுநீரகங்களையும் வெட்டி எடுத்த வைத்திய ஆலோசகரை இலங்கையிலிருந்து லாவகமாக வெளியேற்றிய வரலாறு உண்டு.
மேலும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் இறந்திருக்கின்றார். ஆனால் அதற்கு எதிராக இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna) பணிப்பாளர் சத்தியமூர்த்தி, புதுமாத்தளன் வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது விடுதலைப்புலிகளால் சொல்லப்பட்டு தான் அவ்வளவு கொலைகள் இடம்பெற்றதாக சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) சுகாதாரம் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் கதைப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருடைய உத்தியோகபூர்வ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மாலை 3.30க்கு குறித்த விடயம் தொடர்பில் கதைப்பதற்காக எட்டு நிமிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா உரையாற்றியதை அடுத்து சபையில் சலசலப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |