புலம்பெயர் தமிழரை இழிவுபடுத்திய அர்ச்சுனா: விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
புலம்பெயர் தமிழர் எல்லாம் கழிப்பறை கழுவத்தான் செல்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்தமைக்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.
யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தது தேவையில்லாத வசனம் என்றும், வைத்திருக்கும் கொஞ்சம் மரியாதையையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் வர்ணகுலசிங்கம் எச்சரித்தார்.
வெளிநாட்டில் புலம்பெயர்ந்த உறவுகள் இருந்த காரணத்தில் தான், யுத்த காலத்திலேயும் யுத்தம் முடிந்த காலத்திலேயும் இன்றைக்கும் நூற்றுக்கு 90 வீதமான மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறானதொரு பின்னணியில், காணாமல் போன பிள்ளைகள், பெற்றோரால் அழைத்து செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள், கடற்றொழில், வட மாகாணத்தில் அழிந்து செல்லும் தொழிற்சாலைகள் என பேசுவதற்கு ஏராளமான விடயங்கள் இருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தேவையற்ற விடயங்கள் தொடர்பில் பேச கூடாது என்றும் வர்ணகுலசிங்கம் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)