கனடாவிற்கு சுற்றுலா செல்லவுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு
கொரோனா தொற்றை அடுத்து தனது நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகியுள்ளது கனடா.
கனடா சுற்றுலா பயணிகளுக்கு பயண வருகையை மிகவும் எளிதாக்கியுள்ளது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
இதன்படி ஏப்ரல் 1ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி பெற்ற சுற்றுலாப்பயணிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கனடாவுக்கு சுற்றுலா வருவோர் ஏதாவது குற்றப்பின்னணியுடன் தொடர்பு பட்டு இருந்தால், அவர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதற்குரிய முதல் தீர்வாக, தற்காலிக வாழிட அனுமதி.
கனடாவுக்குள் நுழையும் ஒருவர் தொழில் ரீதியாக ஆனாலும் சரி, அல்லது இரக்கத்தின் அடிப்படையிலானாலும் சரி, உங்கள் குற்றப்பின்னணி தற்காலிகமாக மன்னிக்கப்படவேண்டும் என்பதற்காக வாதம் முன்வைக்க தற்காலிக வாழிட அனுமதி ஒரு தீர்வாக அமையும்.
இரண்டாவது தீர்வு,
குற்றவியல் புனர்வாழ்வு (Criminal Rehabilitation) ஆகும். தற்காலிக வாழிட அனுமதியைப் போலல்லாமல், இந்த குற்றவியல் புனர்வாழ்வுக்கு விண்ணப்பிப்பது நிரந்தர ஒரு தீர்வாக அமையலாம். உங்கள் குற்றவியல் புனர்வாழ்வு விண்ணப்பதை கனடா ஏற்றுக்கொண்டால், நீங்கள் கனடா வருவதற்கு உங்கள் குற்றவியல் பின்னணி தடையாக இருக்காது (நீங்கள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்கும்வரை).
மூன்றாவது தீர்வு,
சட்ட ஆலோசகர் ஒருவரின் கடிதம். கனேடிய புலம்பெயர்தல் சட்டத்தரணி ஒருவர் உங்கள் குற்றப்பின்னணி குறித்து சட்டபூர்வமாக சுருக்கமாக குறிப்பிட்டு, நீங்கள் ஏன் கனடாவுக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பார்.
இந்த மூன்று விடயங்களும், குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், நீங்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட உங்களுக்கு உதவக்கூடும்.
கடந்த 2020ஆம் ஆண்டு, மார்ச் மாதம் கனடா சுற்றுலாப்பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாடுகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
