இளம்பெண்ணுடன் வாக்குவாதம்: இளைஞன் எடுத்த விபரீத முடிவு
இளம் பெண் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (27) சிலாபம் கொக்கவில பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் வலப்பனை, அட்டகெல்லந்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு புலனாய்வு கோப்பில் இருந்து நீக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தகவல்கள்: சி.ஐ.டி அறிக்கை அதிர்ச்சி தகவல்
உயிரிழப்பு
நேற்று (27) மதியம் சிலாபம், கொக்கவில சந்தியில் இந்த நபர் தீ வைத்து கொண்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், நேற்று (27) பிற்பகல் கொக்கவில சந்திப்பில் ஒரு இளம் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த இளைஞன் அப்பகுதி மக்களும் அவதானித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், உயிரிழந்த இளைஞன் சிலாபம் பகுதிக்கு ஏன் வந்தார் என்பது இதுவரை தெரியவரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
