கனடாவில் கிரிக்கெட் பயிற்சி :இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எடுத்த முடிவு
Arjuna Ranatunga
Sri Lanka Cricket
Canada
By Sumithiran
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, தான் கனடாவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி பள்ளியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு தனது சேவை தேவையற்றது என்பதை இது காட்டுவதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
24 மணித்தியாலங்களில் தூக்கி எறியப்பட்டதாக
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது தலைமையில் கிரிக்கெட்டிற்கு இடைக்கால கட்டுப்பாட்டு சபையொன்றை நியமித்த போதும் 24 மணித்தியாலங்களில் தாம் தூக்கி எறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரி மல்வத்து விகாரைகளுக்கு தரிசிப்பதற்காக சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
2ம் ஆண்டு நினைவஞ்சலி