வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் அகோர குண்டுவீச்சு : ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் பலி
மியான்மரின்(myanmar) சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலை மீது நேற்று(12) காலை மியான்மர் இராணுவம் குண்டுவீசி நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தப் பகுதி இராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான பள்ளி ஜனநாயக ஆதரவு இயக்கத்தால் நடத்தப்பட்டது. ஆனால் தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு தீவிரமான சண்டை எதுவும் நடைபெறவில்லை
தாக்குதலை மறுத்துள்ள மியான்மார் இராணுவம்
தாக்குதலைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) இந்த சம்பவத்தை கண்டித்தது.
மியான்மர் இராணுவம் அரசு, தாக்குதலை மறுத்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், நேரில் கண்ட சாட்சிகளும் சுயாதீன ஊடக அறிக்கைகளும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
