பரசூட் சாகசம் செய்த இராணுவ தளபதிக்கு பாராட்டு
Sri Lanka Army
Parachuting
Sri Lanka
Sagala Ratnayaka
By Sathangani
இராணுவ பரசூட் வீரராக தனது திறமையை வெளிக்காட்டிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே நேற்று (02) அதிபர் அலுவலகத்தில் பாராட்டி, கௌரவிக்கப்பட்டார்.
சிறிலங்கா இராணுவத்தின் பரசூட் சாகச வரலாற்றைப் புதுப்பிக்கும் வகையில் குடாஓயா கொமாண்டோ ரெஜிமண்ட் பயிற்சி பாடசாலையில் கடந்த 22ஆம் திகதி இராணுவத் தளபதி பரசூட் சாகசம் செய்தார்.
எயார்போன் சின்னம் அணிவித்து
இராணுவத் தலைமைத்துவத்திற்கு முன்னுதாரணமாக செயற்பட்ட லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் முயற்சியையும், அர்ப்பணிப்பையும் பாராட்டி இராணுவ தளபதிக்கு எயார்போன் (Airborne) சின்னம் அணிவிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்