பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இராணுவச்சிப்பாய் கைது
Sri Lanka Army
Sri Lanka Police
STF
By Sumithiran
ஹங்வெல்ல பிரதேசத்தை மையமாக கொண்டு பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர் தொடர்பில் விசேட அதிரடிப்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஹன்வெல்ல துன்னான பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்படும் போது
கைது செய்யப்படும் போது, சந்தேகநபர் 16 கிராம் ஹெரோயின் மற்றும் மூன்று கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பாதுக்க காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
