சூடானில் இராணுவம் எறிகணை தாக்குதல் - 30 பேர் பலி
Sudan
By Beulah
வடக்கு ஆபிரிக்க நாடான சூடானின் ஆம்டுர்மான் நகரில் இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்எஸ்எஃப் துணை இராணுவ படையின் கட்டுப்பாட்டிலுள்ள, மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகார போட்டி

கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் அதிகார போட்டி காரணமாக இடம்பெறும் உள்நாட்டு போரில் இதுவரையிலும் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் வரையிலானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மேற்படி சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களாகியும் குறிப்பிட்ட பகுதியிலிருந்து உடல்கள் மீட்கப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்