காசாவில் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ள இஸ்ரேல் இராணுவம்!
காசாவில் (Gaza) தொடரும் போர் சூழலுக்கு மத்தியில், இஸ்ரேல் (Israel) இராணுவம் மக்களை இடம்பெயருமாறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், காசா பகுதியில் உள்ள அல்-கராரா 3 மற்றும் அல்-சதார் சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளான 38, 39, 41, 42 இல் வசிப்பவர்கள் அனைவரையும் தங்கள் வீடுகள் மற்றும் தங்குமிடங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவத் தொடர்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்கள் பகுதிகளில் இருந்து ஹமாஸ் (Hamas) மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு பின்னனியில் இருப்பவர்களுக்கெதிராக இஸ்ரேலிய இராணுவம் வலுவாக செயற்படும்'' என குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனிய குடியிருப்பாளர்
இதேவேளை, அண்மைய காலங்களில், கான் யூனிஸ் (Khan Yunis) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மக்களை வெளியேருமாறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது.
மேலும், பாலஸ்தீனிய (Palastine) மக்களை பாதுகாப்பான வலயமாக நியமிக்கப்பட்டுள்ள வலயங்களுக்கு செல்லுமாறு குறிப்பிடப்பட்டாலும் அவை தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாவாது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |