ரஷ்ய மண்ணில் பாயப்போகும் பிரிட்டன் ஆயுதங்கள் : உக்ரைன் படைகளுக்கு கிடைத்தது அனுமதி
உக்ரைனிய(ukraine) படைகள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்ய(russia) மண்ணில் பிரிட்டிஷ்(British) ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ரஷ்யாவின் சட்டவிரோத தாக்குதல்களுக்கு எதிராக தற்காப்புக்கான தெளிவான உரிமை உக்ரைனுக்கு உள்ளது. அது ரஷ்யாவிற்குள் செயல்படுவதைத் தடுக்காது".
சர்வதேச சட்டத்திற்கு இணங்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்
"சர்வதேச சட்டத்திற்கு இணங்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவற்றை கையளிக்கும்போது நாங்கள் தெளிவுபடுத்தினோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து ஆயுதங்களும் ரஷ்யாவிற்குள் பயன்படுத்தப்படலாம்
முன்னாள் கொன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த சேர் பென் வாலஸ், நீண்ட தூர நிழல் ஏவுகணைகளைத் தவிர இங்கிலாந்து வழங்கிய அனைத்து ஆயுதங்களும் ரஷ்யாவிற்குள் பயன்படுத்தப்படலாம் என்று முன்னர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |