முல்லைத்தீவில் இராணுவத்தின் தேவைக்காக காணி சுவீகரிப்பு!
Sri Lanka Army
Mullaitivu
By Kathirpriya
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக காணி சுவீகரிப்பு செய்வதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவீட்டு பணிகள் எதிர்வரும் மே மாதம் 02ஆம் ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் அளம்பில் தெற்கு கிராமத்தில் 2.0234 ஹெக்டயர் அளவு கொண்ட நிலப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது சிங்க றெஜிமன்ட் காணி அமைந்துள்ளது.
குறித்த காணியில் 24 ஆவது சிங்கறெஜிமன்ட் படைத்தலைமையகம் அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கான அளவீடு செய்வதற்காக எதிவரும் 02 ஆம் திகதி நில அளவைத் திணைக்களத்தினர் வருகை தந்து அளவீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்திகளில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி