போதைப்பொருள் பாவனையாளர்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 ஆயிரம் பேர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழக்கின்றனர் என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பான்மையானோர் கஞ்சா பாவனையை நாடியுள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
கஞ்சா பாவனையில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 50 ஆயிரம் எனவும், ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
புகையிலை பாவனை
அத்துடன் பெரும்பான்மையான பாடசாலை மாணவர்களிடையே புகையிலையை பாவிக்கும் போக்கு காணப்படுகின்ற போதிலும் பாடசாலைகளில் ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் தொற்று நோயாக பரவும் அபாயம் இன்னும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் மொத்த சனத்தொகையில் 15 இலட்சம் பேர் புகையற்ற புகையிலை பாவனையிலும், 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை பல்வேறு போதைப்பொருள் பாவனையிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |