யாழில் இன்று அதிரடியாக இடம்பெற்ற கைது..!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Jaso
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் 51 வயதான ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் குறித்த கைது நடவடிக்கையை இன்று முன்னெடுத்தனர்.
போதைப்பொருட்களுடன் கைது
எட்டு கிராம் ஹெரோயின், 16 கிராம் ஐஸ், 120 போதை மாத்திரைகள் என்பனவும் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணத்தொகையும் குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டது.

குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்