அதிரடியாக கைது செய்யப்பட்ட எழுவர்! சிக்கிய பெருந்தொகை மதிப்பிலான போதைப்பொருள்
தென் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு ஹேஸ் எனப்படும் போதைப்பொருளை விநியோகித்த குற்றச்சாட்டில் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட குற்றப்பிரிவுகளால் இன்று ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவ மற்றும் பத்தேகம பகுதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைகளின் போது இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்போது, மொத்தம் 5.6 கிலோகிராம் ஹேஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மதிப்பு சுமார் ரூ. 40 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் சந்தேக நபர்கள் இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில், பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான மிதிகம ருவானின் கூட்டாளியாக அடையாளம் காணப்பட்ட மிதிகம ராணாவும் ஒருவர் என்றும் மேலும் தெரியவந்துள்ளது.
அதன்படி, தென்மாகணத்தில் போதைப்பொருள் விநியோக சங்கிலியில் ஈடுபட்டுள்ள பிற நபர்களைக் கண்டறிய மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
