ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுதலை
புதிய இணைப்பு
தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (20) காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தலா 05 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஹரின் பெர்னாண்டோ இன்று (20.11.2024) காலை பதுளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பதுளை (Badulla) நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando ) பதுளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் குழுவுடன் இணைந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த வேளையில் தேர்தல் தகராறு தீர்க்கும் நிலையமும் பதுளை காவல்துறையினரும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தை கலைத்துள்ளனர்.
பதற்றமான சூழல்
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் காவல்துறையினருக்கு இடையில் இடம்பெற்ற வாக்கு வாதம் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஹரின் பெர்னாண்டோவிடம் தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |